சமர்ப்பணம்

“சென்னைப் பல்கலைக்கழகத்தில் இந்திய இசைப்பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்த போது 1989 ம் வருடம் நவம்பர் மாதம் 30ம் தேதி ‘பிருஹத்வனி’ என்றதொரு உலக இசை ஆராய்ச்சி மையத்தை இசைத்துறைத் தலைவர், பேராசிரியர் டாக்டர் சீதா அவர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தேன். இதன் காரணம் இசையின் அடிப்படைகளின் முக்யத்வம் தெரியாது ஆர்வத்துடன் மேல் நிலைப் படிப்பிற்கு வந்துவிடுகிறர்கள் என்று நான் அறிந்த உண்மையே. இதை ஆமோதித்தார் டாக்டர் சீதா அவர்களும். கர்னாடக இசையை உலக அளவில் முழுமையாகப் புரிந்து கொள்ள, நன்கு பயில, COMET இசைக்கல்வி முறையைப் படைத்தேன். The Ford Foundation-ம் பின்னர், The India Foundation for Arts-ம், Government of India வும் இதற்கு உதவி செய்தார்கள். இப்பயிற்சி முறை கடந்த 25 ஆண்டுகள் உலகத்தில் சிறந்த கலைஞர்கள் முதல், சிறு கிராமக் குழந்தைகள் வரை பயன் கொடுதிருக்கிறது. இதைப் பற்றித் தமிழ் பேசும் மக்களுக்கு, உலகத்தில் எங்கிருந்தாலும் தமிழைத் தன்னுள் வைத்துக் காப்பவர்களுக்கு, இதை நான் அன்புடன் அர்ப்பணிக்கிறேன். இதனால் எல்லோரும் பயனடைய உதவி செய்யக் காத்திருக்கிறேன் ”

-காரைக்குடி சுப்பிரமணியன்